உரிய நேரத்தில் பயிர் காப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக காத்திருக்கும் போது பெய்த மழையால் நனைந்தும், ஏற்கனவே கொள்முதல் செய்து அடுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் காக்கப்பட வேண்டும்.

Related Stories: