அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: பாஜவுக்கு தாவ திட்டம்

சண்டிகர்: அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரியானாவில் ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜியான் சந்த் குப்தாவிடம் அவர் வழங்கினார். குல்தீப் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த குல்தீப், ‘‘காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இருந்த நிலை இப்போது இல்லை என்றும் கொள்கையில் இருந்து வேறுபட்டுள்ளது’’ என்றார். குல்தீப் விரைவில் பாஜவில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: