சிக்கன் ரோஸ்ட்

செய்முறை

கோழி இறைச்சியை நன்றாக கழுவி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள், தயிர் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். இது இரண்டு மணி நேரத்திற்கு ஊறவேண்டும். பிறகு தவாவில் எண்ணை சேர்த்து அதனை தவாவில் இரண்டு பக்கம் திருப்பி போட்டு வேகவிடவும். கோழி முக்கால் பாகம் வெந்தவுடன் அதன் நடுபாகத்தில் சிறிதாக துளையிட்டு அதில் பச்சை மிளகாயை வைத்து மறுபடியும் வேகவிடவும். பச்சைமிளகாய் வெந்ததும் அதன் சாறு சிக்கனுள் இறங்கி, அதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.

Related Stories: