தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

செய்முறை

அரிசியை சுத்தம் செய்து அதனுடன் தேங்காய்ப்பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள். சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.  புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

Related Stories: