×

மாங்காய் இனிப்பு ஊறுகாய்

செய்முறை

மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி, உப்பு சேர்த்து 3 நாட்கள் ஊற வைத்து, வெயிலில் நீர் சுண்டும் வரை உலர்த்தி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். பின்பு அதில் பெருங்காயம், மஞ்சள், மிளகாய், பெருங்காயத் தூள்கள் சேர்த்து அதில் மாங்காய் துண்டுகள் சேர்த்து பிரட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நுரைத்து பாகு பதம் வருகையில் அடுப்பை நிறுத்தி ஆறியவுடன், மாங்காய் கலவையில் கொட்டி ஆறியவுடன் பாட்டிலில் நிரப்பவும். ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

Tags :
× RELATED ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு!