காய்கறி மற்றும் முட்டை ஒயிட் பிரியாணி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் பட்டை - 2,  கிராம்பு - 3, ஏலக்காய் - 2, கருப்பு ஏலக்காய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2, மல்லி - 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகு - 10 இவை அனைத்தையும் ஒரு சுத்தமான துணியில் கட்டி தண்ணீருக்குள் போட்டு, காய்கறிகளை சேர்த்து  பின் 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். (முதலில் மசாலா சிறிது நேரம் கொதித்த பின் காய்கறிகளை சேர்க்கவும்) பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் காய்கறிகளை அதனுடன் சேர்த்து மசாலா துணியை வெளியே எடுக்கவும்.

பின் தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்து மசாலா தண்ணீரை தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும். பின் உப்பு தேவையான அளவு சேர்த்து வேக வைத்த அரிசியை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் தம் போடவும். சுவையான காய்கறி ஒயிட் பிரியாணி தயார். முட்டை சாப்பிடுபவர்கள் இதனுடன் 5 முட்டையை உடைத்து குருமிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பொரித்து வைத்துக்கொள்ளவும். பிரியாணியை இறக்கியதும் முட்டையை சேர்த்து கலந்தால் கமகமக்கும் வெஜிடபுள் முட்டை ஒயிட் பிரியாணி தயார். இதனுடன் குருமா மற்றும் காலிஃப்ளவர் சில்லி சேர்த்து பரிமாறவும்.

>