×

சருமத்தின் வறட்சி போக்க...

நன்றி குங்குமம் டாக்டர்

* வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லும் முன் சிறிது தயிரை உடம்பில் தடவி வைத்திருந்து, பின் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

* தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி நீரால் உடலை கழுவுவதோ, குளிப்பதோ கூடாது. அடிக்கடி செய்தால் ஏற்கெனவே குறைவாகவுள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். சோப்பு போட்டு குளித்தால் இன்னும் அதிகமாக வறட்சி ஏற்படும். எனவே, சோப்புக்கு மாற்றாக கடலை மாவைப் பயன்படுத்தலாம்.

* மிதமான சூட்டிலுள்ள நீரில் குளிப்பது வறட்சியான தோலுக்கு இதமானது. இயல்பாவே வறண்ட சருமம் உள்ளவர்கள், குளிர்காலத்தில் வறட்சியடையும் சருமம் உள்ளவர்கள், குளிர்காலத்தில் வறட்சி பிரச்னைக்கு உள்ளாகுவோர் அதற்கென உள்ள பிரத்யேகமான க்ரீம்களை பயன்படுத்தலாம்.

* மாலையில் குளிர்ச்சியான நேரத்தில் காலுறைகளை தவறாமல் அணிதல், வெடிப்பின் தன்மையைக் குறைக்கும். அதுபோல் செருப்புக்கு பதிலாக கட் ஷூ போன்றவற்றை அணியலாம்.

* உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் அதிகளவில் பயன்படுத்தினால் சருமத்தின் வறட்சி மாறும்.

* குளிர்காலத்தில்தான் அதிகம் வறட்சி ஏற்படும். எனவே, குளிர்காலத்தில் கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து, பின் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் வறண்ட சருமம் சரியாகும். இந்த குளியல் குளிருக்கும் இதமாக இருப்பதுடன் எண்ணெய் வாசனையும் அடிக்காது.

* பனி அதிகம் பெய்யும் காலம், மழைகாலம் ஆகிய பருவங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில், நம் சருமத்தில் சுரக்கும் திரவங்களால் தோல் மென்மையுடனும், ஈரப்பசையுடனும் உள்ளது. ஆனால், குளிர்காலத்தில் ஈரப்பசை குறைவதாலும், உடலில் ஏற்படும் மாற்றத்தாலும் தோல் வறண்டுவிடும் வாய்ப்பு உண்டு.

* வெந்நீர் குளியல் என்றாலும் மிதமான சூடு மட்டுமே சரும நலனுக்குப் பாதுகாப்பானது. தொடர்ச்சியான வெந்நீர் குளியலும் வறண்ட சருமத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

தொகுப்பு: அ. வின்சென்ட்

Tags :
× RELATED சருமம் பளபளக்க செவ்வாழை!