கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சாம்ராஜ்நகர், சிக்கமங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஓரிரு நாட்களில் இரு அணைகளும் முழுகொள்ளளவை எட்ட உள்ளதால் விரைவில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: