தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: