மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை: களைகட்ட தொடங்கியது குற்றாலம்!

தென்காசி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதையொட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. கேரளாவில் பருவமழை நீடித்ததையடுத்து மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மெயினருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளமாக மழைநீர் பாய்கிறது. இவற்றில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தற்போது சாரல் மழையுடன் குளுமையான சூழல் நிலவுவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மானாவாரி விவசாயத்திற்கு ஏற்றவாறு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக வாட்டிவதைத்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் ஆனந்தமடைந்துள்ளனர்.

Related Stories: