வரும் 9-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வட்டத்தில் திம்மசமுத்திரம், உத்திரமேரூர் வட்டத்தில் கம்மாளம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் முத்தியால்பேட்டை, பெரும்புதூர் வட்டத்தில் மொளச்சூர், குன்றத்தூர் வட்டத்தில் ஆதனூர் ஆகிய கிராமங்களில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வரும் 9ம்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விடுப்பட்டு இருப்பின் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: