44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு, விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஒலிம்பியாட் தொடக்க விழா, விளம்பரம், வரவேற்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும்  ஜுலை 28-ம்  தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள், தொடக்க விழா, விளம்பரம், வரவேற்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையண்பு, அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, சிறப்பு அலுவலர் தரேஸ் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: