மானாமதுரை அருகே அரிசி ஆலையில் பதுக்கிய 4.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்: உரிமையாளர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே தனியார் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.5 டன் ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் உள்ள தனியார் அரிசி அரவை மில்லில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிவகங்கை மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவு எஸ்ஐ கணேசலிங்கபாண்டி, குபேந்திரன், பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர் வேதியரேந்தலில் உள்ள தனியார் அரிசி ஆலையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசியினை கொட்டிய நிலையில் (சுமார் 4 டன்), அரைக்காத அரிசியும், அரைத்த அரிசி சுமார் 50 கிலோ மூட்டைகள் கொண்ட 300 அரிசி மூட்டைகளும் மொத்தம் சுமார் 4.5 டன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை வருவாய்த்துறையினர், வட்ட வழங்கல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வேதியரேந்தல் அரிசி ஆலை உரிமையாளர் ஜெயராமன் அவரது மகன் கார்த்திக், மானாமதுரையை சேர்ந்த ராஜா, மதுரை வண்டியூரை சேர்ந்த சக்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அரிசி ஆலை உரிமையாளர் ஜெயராமனை கைது செய்தனர். கைப்பற்றிய அரிசி மூட்டைகளை வட்டவழங்கல் அலுவலர் ரேவதியிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: