தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இன்றும், நாளையும்  திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக்வ் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Related Stories: