ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை: தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் காங்கிரஸ் கட்சிஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை அளித்த பேட்டி: பாஜ ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும். வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.

இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலை தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா. இந்திய குடிமகனுக்கு, முதல் குடிமகன் அளித்த மிகப்பெரிய கவுரவம். மதம், ஜாதி கடந்தவர் இளையராஜா. அவருக்கு எந்தவித அடையாளமும் தேவையில்லை. எல்லாத்தையும் தாண்டியவர். அனைவருக்கும் சமமான மனிதர். அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா எழுதியது பல தரப்பினர் சொல்லும் கருத்து. புதிது கிடையாது. கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில அரசு நல்ல வேலை செய்வதாக கூறினார்.

அனைத்தும் அவரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். மோடி பற்றி பேசியது தனிப்பட்ட கருத்து. அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. தனித்திறமையால் கிடைக்கும் அங்கீகாரத்தை கொச்சைபடுத்துவது வேதனையாக உள்ளது. தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். மகராஷ்டிராவில் நடந்ததுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஐசியுவில் கட்சியை வைத்துள்ள கே.எஸ்.அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐசியுவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக திமுக உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கிடைக்காது.

ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகிவிடும். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, சிந்தி சிதறி கிடக்கும். கட்சியை ஒட்ட வைக்க ‘பெவிகுவிக்’ வாங்கி தர தயாராக உள்ளோம். உருண்டு வருவோம். நடந்து வருவோம். அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். ஒரு கட்சி என்ன அவமானபடுத்தினாலும், கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட கூட்டணியில் இருப்போம் என காங்கிரஸ் நினைக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories: