சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தம்

குன்னூர்:  தொடர் மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால்  உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. பாதுகாப்பு கருதி சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. பனி மூட்டத்துடன் மழை பெய்து வருவதால் குளு குளு கால நிலையில் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

Related Stories: