மலை ரயில் பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் வீழ்ச்சிகள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை வனப்பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் யானை உட்பட வன விலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. மேலும் பசுமையான இயற்கை காட்சிகள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும். குறிப்பாக மலைப் பாதை ஓரங்களில் உள்ள நீர் வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது அமையும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் வனப் பகுதிகள் அனைத்தும் பசுமைக்கு திரும்பியுள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் நீர்வரத்து உயர்ந்ததால், இந்த நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Related Stories: