டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், பேரவை செயலாளருமான சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவை செயலக பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.