சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியிருந்தார்.