டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

* செம்பு பாத்திரங்களை கெட்சபால் துடைத்தால், பளிச்சென்று புதிய பாத்திரம் போல் மின்னும்.

* வண்ணக்கோலம் போடும் போது, சலித்த நைஸ் மணலைச் சேர்த்துப் போடலாம். வண்ணப்பொடி காற்றில் பறக்காமல் அப்படியே பார்க்க அழகாக இருக்கும்.

* பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

* இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

* வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

* துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

Related Stories: