காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மின் தகன மேடை அமைக்க நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மின் தகன மேடை அமைக்க வர மகாலட்சுமி சில்க்ஸ் ரூ. 2 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் சின்ன காஞ்சிபுரம் நாகலூத்துமேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மின் தகன மயானம் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பொதுமக்கள் பங்களிப்பும் மாநகராட்சியிடம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மின் தகன மயானம் அமைக்க பலரும் பங்களிப்பு தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பட்டுச்சேலை நிறுவனமான வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனம் சார்பில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோரிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வர மகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் எஸ்கேபி கோபிநாத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொறியாளர் கணேசன், மாமன்ற உறுப்பினர் சந்துரு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இதையடுத்து, பொதுநல நோக்கில் காஞ்சிபுரம மாநகராட்சிக்கு மின் மயானம் அமைக்க பங்களிப்பு தொகையை வழங்கிய வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: