அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில், 100 மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது கிளாம்பாக்கம். இங்கு உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியின் சார்பில் தேசிய மாணவர் படையினர் மற்றும் ஆதியோகி நிறுவனத்தினர் இணைந்து பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று காலை நடந்தது.

இதில், தேசிய மாணவர் படை அதிகாரி லேப்ட் கார்னல் எஸ்.எம்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்நடராஜன், உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் எபினேசர்பால் புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்றார். இதில்,  சிறப்பு அழைப்பாளர்களாக ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, ஆதியோகி நிறுவனத்தின் பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: