திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு

திருக்கழுக்குன்றம்:  திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக  உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பெ.தேவதாஸ் (75).    இவர், திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளராகவும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவராகவும்  பதவி வகித்து வந்தார். தற்போது,  தலைமை பொதுக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக  உடல்நிலை சரியில்லாத  நிலையில் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால், இவரது  உறவினர்கள் இவரை  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவதாஸ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக  உயிரிழந்தார். திமுகவின் மூத்த நிர்வாகியான தேவதாஸ் இறந்த தகவல் அறிந்த திமுகவினர் பெரிதும் வேதனையுற்றனர்.

Related Stories: