பட்டப்பகலில் கத்தியுடன் இளைஞரை துரத்திய மர்ம கும்பல்

காஞ்சிபுரம்: கோயில் நகரம், பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரின் சுற்றியுள்ள பல பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக நகருக்குள் வருவது வழக்கம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் 4 மற்றும் இருசக்கர வாகனத்தில் நகர் முழுவதும் ரோந்து செய்து குற்றங்களை தவிர்த்து வருகின்றனர். மேலும், குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளநிலையில் இளைஞர்கள்‌ சிலர் தவறான போதை பழக்கத்தில் பல குற்றங்களை செய்து வருகின்றனர்.

நேற்று நண்பகலில் மடம் தெரு பகுதியில் 3 நபர்கள் 12 மணிக்கு பட்டப்பகலில் பட்டாகத்திகளுடன் ஒரு வாலிபரை துரத்தியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரும் தொடர்ந்து சாலையில் அச்சத்துடன் ஓடிய காட்சி சினிமாவை மிஞ்சியதாக இருந்துள்ளது. பட்டபகலில் சினிமா தியேட்டர், பல கடைகள் அமைந்துள்ள இடத்தில் நடந்த இச்சம்பவம் பார்த்த பெண்கள் அச்சத்தில் உறைந்து உள்ளளர். இது குறித்து காஞ்சிபுரம் விஷ்ணுகாந்தி போலீசார் விசாரித்து வருகிறகின்றனர்

Related Stories: