ஐ.நா.அமைதிப்படையில் புதிய கமாண்டராக மோகன் நியமனம் முதல்வர் வாழ்த்து

சென்னை: ஐ.நா., அமைதிப் படையில் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன்  நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்று என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக லெப்டினண்ட் ஜெனரல் மோகன் சுப்பிரமணியன், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெசால் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி, அப்பகுதியில் அமைதியும் நல்லிணக்கமும் தழைக்க மோகன் சுப்பிரமணியன் பணியாற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: