மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று முதல் மாஸ்க் கட்டாயம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ெமட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் ெதாற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். எனவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: