கஞ்சா புகைத்த வாலிபர்கள் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி விளையாட்டு திடலில் இரவு நேரங்களில் வாலிபர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 3 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை  செய்ததில் வியாசர்பாடி பி.வி.காலனி  பிரவேஷ்(20), வியாசர்பாடி அன்னை சத்யா நகர்  டிலாவர் பாஷா(20) மற்றும் பி.வி.காலனி  கமலேஷ்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்களுடன் புகைத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: