பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மான் இருந்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் மனைவியை பக்வந்த் மான் விவாகரத்து செய்தார். இந்நிலையில், பக்வந்த் இன்று 2வது திருமணம் செய்து கொள்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மியின் பஞ்சாப் தலைமை செய்தி தொடர்பாளர் மால்விந்தர் சிங் காங் கூறுகையில், ‘முதல்வர் பக்வந்த் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். குர்பிரீத் கவுர் என்ற மருத்துவரை அவர் திருமணம் செய்து கொள்கிறார்,” என்றார்.

Related Stories: