காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:

பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறவுள்ளது. 8.7.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலகம், காஞ்சிபுரம், 9.7.2022 சனிக்கிழமை - வட்டார வளர்ச்சி அலுவலகம், வாலாஜாபாத், 11.7.2022 திங்கட்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், உத்திரமேரூர் 12.07.2022 செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், குன்றத்தூர், 13.7.2022 புதன்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் தொடர் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், பெற விண்ணப்பிக்க தவறியவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மருத்துவர்களால் மருத்துவச்சான்று, உதவித்தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள், ஆவின் பால் முகவர், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பற்றோர்களுக்கான உதவித்தொகை பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டுவதற்கு வீட்டுக்கடன்  விண்ணப்பங்களை அளிக்கலாம். முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பதிவு மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ ஒன்றிய அரசின் திட்டங்கள் வாயிலாக, உபகரணங்கள் பெறுவதற்கும் வருமான சான்று வருவாய்துறையின் வாயிலாக வழங்கப்படும்.

மேலும், இம்முகாமில் வருவாய்துறை, மருத்துவத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், பள்ளி கல்வித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், போக்குவரத்துத்துறை, (ஆதார் அட்டை), முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போன்ற பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

இம்முகாமிற்கு வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, புகைப்படம்  4 ஆகிய அனைத்து ஆவணங்களுடன் அசல் மற்றும் நகலுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: