செய்யூர்: செய்யூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், ரூ.38 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு, மானிய விலையில் விவசாயி பொருட்கள் வழங்கப்படஉள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சந்தானம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்தனர்.