நலவாரியம் மூலம் இணையவழி சேவையை தொடங்க வேண்டும்

சென்னை: சென்னை ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்டோவிற்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவங்கி ஏற்று நடத்திட வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் கிட் வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளையும் சென்னை மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் இணைக்க வேண்டும். பண்டிகை காலங்களில் போனஸ் வழங்க வேண்டும். விண்ணப்பித்த நாளில் இருந்து பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன் தொகை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும். இயற்கை மரண நிதி ரூ.2,00,000 ஆகவும், விபத்து மரண நிதி ரூ.5,00,000 ஆகவும், கல்வி பண பலன்களை இரட்டிப்பாகவும் உயர்த்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

Related Stories: