பாஜ நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொது அமைதியை குலைக்கும் வகையில் டிவிட்டர் பதிவிட்டதாக பாஜ நிர்வாகி வினோஜ் பி.செல்வத்தின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜ மாநில துணை தலைவர் வினோஜ் பி.செல்வம் அவரது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார். சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார், வினோஜ் பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வினோஜ் பி.செல்வம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் வினோஜ் பி.செல்வம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: