செல்போன் திருடர்கள் கைது

சென்னை: சென்னை மந்தைவெளி 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புகழரசன்(18). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி படிப்புக்கு இடையே பகுதி நேர வேலையாக பேப்பர் போடும் பணி செய்து வருகிறார். அதன்படி கடந்த 27ம் தேதி காலையில் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ஒரு வீட்டில் பேப்பர் போட்டுவிட்டு திரும்பியபோது, ஸ்கூட்டரில் வந்த 2 பேர் புகழரசனிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் ரஞ்சித்(20), தினேஷ் (எ) சின்ன அம்மா பாய்(20) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: