மெட்ரோ ரயில் நிலையத்தில் 3.5 கிலோ வெள்ளி பறிமுதல்: ஒருவர் கைது

தண்டையார்பேட்டை: உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் பையுடன் நின்றிருந்த ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 3.5 கிலோ வெள்ளி கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கைப்பையுடன் நின்றிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரோந்து போலீசார் சோதனை செய்தனர். இதில், அவர் உரிய ஆவணம் இன்றி வெள்ளிக் கட்டிகள் வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை வெள்ளிக் கட்டிகளுடன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தீவிரமாக விசாரித்தார். அதில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த செந்தில் செல்வம் (45) என்பதும், இவர் சாமி சிலைக்கு கிரீடம் செய்வதற்காக வெள்ளி பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார். பின்னர் அவற்றை என்எஸ்சி போஸ் சாலையில் ஒரு பட்டறையில் வைத்து 3.5 கிலோ வெள்ளிக் கட்டிகளாக மாற்றி சொந்த ஊருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்களும் செந்தில் செல்வத்திடம் இல்லை என்பதும் தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் விற்பனை வரி அதிகாரிகள் விரைந்து வந்து, 3.5 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் செந்தில் செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், இந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட நபர்கள் காண்பித்து பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: