பைக்கில் லிப்ட் தராததால் ஆத்திரம் வாலிபருக்கு அடி உதை

ஆவடி: லிப்ட் தராத ஆத்திரத்தில் வாலிபரை அடித்து உதைத்த போதை ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த அண்னனூர் ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் கார்த்திக் (24), வெல்டிங்வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவரது பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றார். அப்போது அவரது நண்பர்கள் விக்கி கார்த்திக் (20), அப்பு(20), நரசிம்மன் (20) ஆகிய மூவரும் தங்களை தெருமுனையில் இறக்கிவிட்டுச் செல்லுமாறு கூறினார்.

அவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அதனால் அவர்களை கார்த்திக் பைக்கில் ஏற்ற மறுத்துவிட்டார், ஆத்திரமடைந்த மூவரும் கார்த்தியை கையால் தாக்கியும், கால்களால் அடித்து உதைத்துள்ளார். சத்தம் கேட்டவுடன் கார்த்திக் அண்ணன் கீர்த்திவாசன் (27) ஓடிவந்து தம்பியை காப்பாற்றினார். உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை நரசிம்மன் என்பவர் கீர்த்தி வாசன் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

பலத்த காயமடைந்த கீர்த்திவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் ஆய்வாளர் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: