சென்னை: பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6-10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது.