சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் பாலம் தடுப்பு சுவர் உயர்த்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ரயில் நிலையம் தாண்டி புளியங்குடி செல்லும் சாலையில் குளத்தின் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சாலையின் அளவிலேயே உள்ளதால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் திருப்பத்தில் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்தப்பகுதி வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாலம் இருப்பது தெரியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி கட்டினால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: