அரசு ஒப்பந்ததாரர்களான கோவை வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரைக்கு தொடர்புடைய 35 இடங்களில் ஐ.டி. சோதனை

சென்னை: அரசு ஒப்பந்ததாரர்களான கோவை வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரைக்கு தொடர்புடைய 35 இடங்களில் ஐ.டி. சோதனை நடத்தினர். எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர். சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகியோர் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டவர்கள். வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.

Related Stories: