×

எச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்!

டிசம்பர் 1, உலக எயட்ஸ் தினம். அதை முன்னிட்டு ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா அறக்கட்டளை, டான்சாக்ஸ், டைடல் பார்க், தெற்கு ரயில்வே மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் அனைவரும் இணைந்து சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில், எயிட்ஸ் நோயாளிகள் மீது விழுந்துள்ள களங்கத்தை உடைத்தெறிக்க சுவரோவியங்களை வரைந்துள்ளனர்.

உலகின் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுநோயை இந்தியா கொண்டுள்ளது. தற்போது இது குறைந்து வருகிறது என்றாலும், அதில் பாதிக்கப்பட்டவர்களின் மேல் இருக்கும் கண்ணோட்டம் மட்டும் இன்னும் மாறவில்லை. நோய் குறித்த மூடநம்பிக்கை, தவறான எண்ணங்களை உடைத்தெறிக்கவே இந்த ஓவியங்களை வரைந்துள்ளதாக தெரிவித்தார் சென்னையை சேர்ந்த கிராஃபிட்டி ரைட்டர் மற்றும் ஸ்ட்ரீட் ஆர்டிஸ்ட் ஏ-கில். ‘‘இந்த ‘வி ஆர்’ என பெயரிட்டுள்ளோம். எய்ட்ஸ் நோயாளிகளும் மற்றவர்களை போல் மதிக்கப்படவேண்டும் என்பதே இந்த ஓவியத்தின் நோக்கம். இந்த சுவரோவியம் ஐந்து நபர்களின் உருவப்படங்களை குறிக்கும். அதில் மூன்று பேர் எச்.ஐ.வி நோயாளிகள்’’ என்றார் ஏ-கில்.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குனரான அமித் சிங்கிள், “வண்ணங்களைக் கொண்டு இடங்களை அழகுபடுத்தி வந்தாலும், எய்ட்சால் ஏற்படும் சமூக விளைவுகளை மதிப்பிட்டு இந்த சுவரோவியம் வரைய ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக இது மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

TANSACS அமைப்பின் திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், டான்சாக்ஸ் அமைப்பு 1994ல் நிறுவப்பட்டு, எச்.ஐ.வி பாதிப்பைக் குறைப்பது குறித்து பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான முயற்சி தான் இந்த சுவரோவியம். இந்த ஓவியம் எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதி அளிக்கும் அடையாளமாகவும் இருக்கும்’’ என்றார்.

Tags :
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…