சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசு

சென்னை: சமையல் எண்ணெய்களின் விலையை குறைக்க உற்பத்தியாளர்களையும் , விற்பனையாளர்களையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஒன்றிய அரசுடைய மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சமீபகாலமாக சமையல் எண்ணெய் சர்வேதச அளவில் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக அனைவரும் பயன்படுத்தும் பாமாய்லின் விலையானது 45% சதவீதத்திற்கும் குறைவாக விலை சரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக இந்த விலை குறைப்பின் பயன்களை இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை 60% சமையல் எண்ணெய் என்பது நம் இறக்குமதி செய்யக்கூடியதாகும் . சர்வேதச விலை குறைப்போ அது இந்திய சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே கடந்த மாதம் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும்  காலங்களிலும் இன்னும் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது இருக்க கூடிய எண்ணெய் விலையில் இருந்து பெரிய அளவிலான விலை குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.  

Related Stories: