ஆர்.எஸ்.பாரதி எம்பி நிதியில் இருந்து ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதியில்; 7 இடத்தில் உயர்கோபுர விளக்கு

ஆலந்தூர்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நிதியில் இருந்து ரூ.62.59 லட்சம் மதிப்பீட்டில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 பேருந்து நிலையம், 4 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு ஆகியவற்றை இயக்கிவைக்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஆர்.எஸ்.பாரதி எம்பி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாஞ்சில் பிரசாத், சாலமோன், பிருந்தா, முரளிகிருஷ்ணன், பூங்கொடி, ஜெகதீஸ்வரன், துர்காதேவி நடராஜன், தேவி ஏசுதாஸ் முன்னிலை வகித்தனர். இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஆலந்தூர் நீதிமன்றம், பழவந்தாங்கல், கிருஷ்ணசாமி தெரு, நங்கநல்லூர் இந்து காலனி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 நவீன நிழற் குடைகளை திறந்துவைத்தார்.

ஆலந்தூர் எம்.கே. சாலை, கடும்பாடி அம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, ஆதம்பாக்கம் சாந்தி நகர், பாண்டுரங்கன் கோயில், நங்கநல்லூர், தர்மலிங்கேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகளை இயக்கிவைத்தார்.

Related Stories: