அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்

சேலம்: அதிமுகவில் மோதல் முற்றியுள்ள நிலையில் அரசியலை வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக ஜாதியை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

ஒருவரை தாழ்த்தியும் ஒருவரை உயர்த்தியும் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சேலத்தில் தேசிய மக்கள் இயக்கம் என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் சிலைக்கு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து வணங்குவது போல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “தேவர் இன சொந்தங்களை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துபவரை அடையாளம் காண்பீர்’ என எழுதப்பட்டுள்ளது.

அதன் அருகில் ஓ.பன்னீர்செல்வத்தின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை கட்சி ரீதியாக போஸ்டர் ஒட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜாதி பற்றி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: