சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்; கண்காணிக்க 15 சிறப்பு குழுக்கள் அமைப்பு

சென்னை: சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சென்னையில் பொது இடங்களில் கண்காணிக்க 15 சிறப்புக்குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்த நிலையில் இருந்த கொரோனா இப்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ள்ளது. இதற்கிடையில் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு கண்காணிப்பு குழுவை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதனையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒவ்வொரு மண்டலங்களிலும் தலா ஒரு குழு என்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வளர் மற்றும் 2 மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 5 இந்த குழுவில் இடம் பெறுவார்கள். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கண்காணிப்பு என்பது பொது இடங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: