திருச்சுழி பகுதியில் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழி பகுதியில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 50 சதவீத பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை, இரவு காவலாளிகளும் கிடையாது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில ஊர்களில் மட்டுமே அரசு பள்ளிகள் நகரின் மையப்பகுதியில் உள்ளன. பெரும்பாலான பள்ளிகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் உள்ளன. பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பள்ளிகளில் இரவு காவலாளிகள் இல்லாததால் சமூக விரோதிகள் தங்குமிடமாகவும், மது அருந்தும் கூடாரமாகவும் மாற்றி வருகின்றனர். பள்ளிகளில் வைத்திருக்கும் பொருட்களும் திருடு போகும் வாய்ப்புள்ளது. எனவே, திருச்சுழி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டவும், இரவு காவலாளி நியமிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘திருச்சுழி பகுதி அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மேலும், பள்ளிகளில் இருக்கும் பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, அனைத்து அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்’ என்றனர்.

Related Stories: