புதுக்கோட்டை மாவட்டத்தில் காஸ் விலை உயர்வால் அடுப்புகரி வாங்கும் ஓட்டல்காரர்கள்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகை ஊராட்சியில் உள்ள கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் மீண்டும் கரிமூட்டம் போட தொடங்கியுள்ளனர்.ஒன்றிய அரசின் காஸ் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வால் மக்கள் மற்றும் டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்கள் விறகு கரி அடுப்புக்கு மாறிவிட்டனர். கரி மூட்டம் போடும் தொழிலாளர்களிடம் விசாரித்தபோது நாங்கள் முன்பு கரிமூட்டம் போடுவது எங்கள் குலத்தொழில். இடைப்பட்ட காலங்களில் மக்களும், டீக்கடை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் காஸ் அடுப்புக்கு மாறியதால் கரி அடுப்பை ஒதுக்கி விட்டார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆகையல் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். இந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு காஸ் விலை உயர்வால் எங்களது பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களிடம் விறகு கரி கேட்க தொடங்கியுள்ளனர். இதனால் நாங்கள் குளக்கரைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி முறையாக துண்டு போட்டு காற்று புகாவண்ணம் அடுக்கி மண் உலை பூசி பற்றவைத்து கரியாகி விற்பனை செய்ய தொடங்கி உள்ளோம். அரசு தடை விதித்து உள்ள விவசாயத்திற்கும், மக்களுக்கும் தீமை விளைவிக்ககூடிய சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்தால் அரசு நிலங்களில் உள்ள அனைத்து கருவேல மரங்களை அழித்து விடலாம். மீண்டும் நாட்டு மரங்களை நடவு செய்தால் விவசாயிகளுக்கு நன்மை தரும் என்று கூறினர்.

Related Stories: