வெள்ளாளவிடுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூ: விலை குறைவால் விவசாயிகள் வேதனை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சியில் விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இதில் ஒரு பகுதியாக செண்டி பூ பயிர் செய்துள்ளார்கள்.இவர்களிடம் இதன் விபரம் கேட்டபோது பூச்செடிகள் கர்நாடகா மாநிலம் ஓசூர் இருந்து தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு உரிய தொகையை அவர்களது வங்கி கணக்கில் நாங்கள் செலுத்த வேண்டும். அவர்கள் அனுப்பிய செடிகளை தஞ்சையிலிருந்து நாங்கள் சொந்த செலவில் எடுத்து வந்து தயார் செய்து வைத்துள்ள வயல்களில் செடிகளை நடவு செய்கிறார்கள். நல்ல விலைக்கு விற்பனையான பூக்கள் தற்சமயம் கிலோ ஒன்று ரூ.15க்கு விற்பனை ஆவகிறது. ஆகையால் பூக்களை பறிக்கமால் விட்டு விடுவதே சிறந்தது என எண்ணம் வருகிறது.

பூ விவசாயிகள் வாழ்வாதாரம் சிறக்க கந்தர்வகோட்டை பகுதியில் சென்ட் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டும். பூ செடி பயிர் செய்ய அரசு சொட்டு நீர் பாசனம், சுழல் நீர் பாசனத்திற்கு மானியத்தில் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறார்கள். கிணற்றில் டீசல் மோட்டர் மூலம் தண்ணீர் பாசனம் செய்பவர்களுக்கு மீனவர்களுக்கு வழங்குவது போல் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள் பூ பயிர்செய்யும் எங்கள் வயல்களை கண்காணித்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.வெளிசந்தையில் பூ செடிகளுக்கு அடிக்கும் மருந்து விலை அதிகமாக உள்ளதால் வேளாண்துறை மூலம் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: