இன்று தங்கம் வாங்க சரியான நாள்... சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!

சென்னை: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.

இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த மாதம் இறுதி நாட்களில் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் கடும் இறக்கம் கண்டது. ஒரு கிராம் ரூ.4,800-க்கு குறைவாகவும், ஒரு சவரன் ரூ. 38-க்கு குறைவாகவும் விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்தனர். ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத்தின் தொடக்கம் முதலே, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. ஜூலை 1,2 தேதிகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38-க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,700-க்கு மேலாகவும் விற்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.56 உயர்ந்து, சவரனுக்கு ரூ.38,440-க்கும், ஒரு கிராம் ரூ.4,805-க்கும் விற்பனையானது. ஆனால், இன்று அதிரடியாக தங்கத்தின் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் குறைந்துள்ளது. ஆம்! இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4,740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.62.50 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கும் விற்கபட்டு வருகிறது.

Related Stories: