அடிப்படை வசதிகள், உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!!

சென்னை : தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் தெரிவித்துள்ளது. 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்த நிலையில் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சேர்க்கைக்கும் அனுமதியும் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே பிஇ., பி.டெக்., பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

Related Stories: