மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

சென்னை: கண்ணகி நகரை சேர்ந்தவர்  பார்த்தசாரதி (எ) பாட்ஷா (18). இவர் பள்ளிக்கரணையை சேர்ந்த தனது நண்பர்  முத்துவுடன் சேர்ந்து மயிலாப்பூர் டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பு ஒன்றில், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் நேற்று  முன்தினம் மாலை ஈடுபட்டார். அப்போது பாட்ஷா தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி  கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். தொட்டியில் உள்ள தண்ணீரை  வெளியேற்ற மின்மோட்டார் இயக்கப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக  பாட்ஷா மின்சாரம் பாய்ந்து இறந்தார். மற்ெறாரு சம்பவம்: தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார் (45). இவர், நேற்று காலை தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை காமராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் கடை மேல்தளத்தில் விளம்பர பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக உயரழுத்த மின்கம்பி மீது குமார் கை உரசியதால் தூக்கிவீசப்பட்டு, சம்பவத்திலேயே உடல் கருகி பலியானார்.

Related Stories: