பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத  போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கருநாகராஜன், சக்ரவர்த்தி, கராத்தே தியாகராஜன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில் தமிழக பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, திருச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருவண்ணாமலையில் மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, செங்கல்பட்டில் மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம், கன்னியாகுமரியில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ கலந்து கொண்டனர். மற்ற மாவட்டங்களில் கட்சியின் முன்னணியினர், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: